sabarimalai and pamba - 2026

சபரிமலை யாத்திரை; பஸ் போக்குவரத்தில் கோட்டை விடும் தமிழக அரசு!

சற்றுமுன் அடடே... அப்படியா? சுற்றுலா நெல்லை பொது தகவல்கள்
sabarimalai and pamba - 2026

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து பம்பைக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் தினமும் 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், பல ஆண்டுகளாக சபரிமலை சீசனுக்கு அருகில் உள்ள தென்காசியில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் தற்போது இயக்கப்படுவதில்லை ஏன் என ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

விரைவில் செங்கோட்டை, தென்காசியில் இருந்து பத்தனம்திட்டா வழியாக பம்பைக்கு திருநெல்வேலி கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து பம்பைக்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் தினமும் 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து
புறப்படும் நேரங்கள். தினமும் இரவு 7:00, 7:30, 8:00 மற்றும் 8:30 மணிக்குப் பேருந்துகள் புறப்படும்.

  • பயணக் கட்டணம். ஒரு நபருக்கு ₹357 ஆகும்.
    சேவைக் காலம். நவம்பர் 16, 2026 முதல் ஜனவரி 2027 (மகரவிளக்கு சீசன் முடியும் வரை) இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. (குறிப்பு: மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்படும் டிசம்பர் 26 முதல் 29 வரை இந்தச் சிறப்புப் பேருந்து சேவை இருக்காது)
ALSO READ:  மண்டலபூஜை; சபரிமலை நடை திறப்பு! குவிந்த பக்தர்கள்!

இந்தச் சிறப்புப் பேருந்துகள் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தக்கலை, மார்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, அடூர், பத்தனம்திட்டா மற்றும் நிலக்கல் வழியாகப் பம்பையைச் சென்றடையும்.

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க கீழ்க்காணும் வழிகளில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்:

  • இணையதளம். TNSTC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம்.
  • மொபைல் செயலி & வாட்ஸ்அப். TNSTC Official செயலி அல்லது 94440 18888 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகப் பதிவு செய்யலாம்.
  • நேரடி முன்பதிவு. பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் (Counters) மற்றும் KIOSK இயந்திரங்கள் மூலமாகவும் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

நாகர்கோவிலில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது போல், தென்காசியில் இருந்து செங்கோட்டை புனலூர் பத்தனம்திட்டா வழியாக பம்பைக்கு தினசரி சபரிமலை சிறப்பு பஸ்கள் காலை மாலை வேலைகளில் குறைந்தது நான்கு பஸ்களாவது இயக்க வேண்டும் என பயணிகள் ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தென்காசியில் இருந்து பம்பை சுமார் 150 கி.மீ. தொலைவுதான்.

சபரிமலையில் சீசன் தொடங்கிய காலம் முதல் தென்காசியில் இருந்து பம்பைக்கு முதல் முதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தென்காசி புனலூர் வழியாகவே சபரிமலைக்காக சென்னை கொல்லம் ரயில் சென்று வந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் சபரிமலை செல்வதற்கு ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன. ரயிலும் கூட தற்போது சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் மட்டுமே நேரடியாக புனலூரை அடைகிறது. குருவாயூர் பகல் நேர ரயில் மதுரையில் இருந்தும், பாலக்காடு வண்டி இரவு நேரத்திலுமாக ரயில்கள் ஓடுகின்றன.

ALSO READ:  மண்டல பூஜை விழா; சபரிமலை நடை நாளை திறப்பு!

இருப்பினும் சென்னை – செங்கோட்டைக்கு மேலும் இரு ரயில்கள் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் தென்காசி அல்லது செங்கோட்டையில் இறங்கி இங்குள்ள குற்றாலம், தென்காசி பகுதிகளில் கோயில்களில் வழிபாடு நடத்தி, பம்பை செல்வதற்கு பஸ்களை எதிர்பார்க்கின்றனர். எனினும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கிய தென்காசி – பம்பை சிறப்பு பஸ்கள் தற்போது கடந்த சில ஆண்டுகளாகவே இயக்கப்படுவதில்லை. முன்னர் செங்கோட்டையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயங்கியதுண்டு.

தற்போது கேரள அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே தென்காசியில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த பஸ்கள் தென்காசியில் இருந்து புறப்பட்டு புனலூரில் குறிப்பிட்ட நேரங்களில் நிறுத்தப்படுவதால் பயணிகள் பக்தர்கள் விரைந்து பம்பைக்கு சென்று சபரிமலை செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உரிய நேரத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க தென்காசியில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி கோட்டம் சார்பில் செங்கோட்டை அல்லது தென்காசி பணிமனைகளில் இருந்து செங்கோட்டை – புனலூர் பத்தனம்திட்டா வழியாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். இதுபோல் மதுரையில் இருந்தும் தென்காசி – செங்கோட்டை – புனலூர் வழியாக பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க பயணிகள் ஐயப்ப பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ALSO READ:  41 நாள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam