
சென்னை எழும்பூர் – நெல்லை – தென்காசி ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் (06015) — நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை புறப்பட்டு தென்காசி சனிக்கிழமை சென்றடையும்
பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தெற்கு ரயில்வே சென்னை எழும்பூர் – தென்காசி ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயிலை (One-way Superfast Special – 06015) அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு (Advance Reservation) தற்போது திறக்கப்பட்டுள்ளது!
ரயில் எண் 06015 (சென்னை எழும்பூர் – தென்காசி): வரும் நவம்பர் 20, 2026 (வெள்ளிக்கிழமை) இரவு 23:50 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.
இந்த ரயில் நவம்பர் 20 (வெள்ளிக்கிழமை) இரவு 23:50 மணிக்குப் புறப்படுவதால், தாம்பரத்தைக் கடந்து (00:30 மணி) செல்லும் வழித்தடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மறுநாள் தேதியை (நவம்பர் 21 – சனிக்கிழமை) கவனமாகத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
?இந்த ரயிலில்
1 ஏசி டூ-டியர் (AC 2-Tier), 3 ஏசி த்ரீ-டியர் (AC 3-Tier), 10 ஸ்லீப்பர் (Sleeper), 2 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் (General Second Class) மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்கள்.
சென்னை எழும்பூரில் 23:50 (வெள்ளி) புறப்பட்டு
தாம்பரம்: 00:30 / 00:32 (சனி)
செங்கல்பட்டு: 01:00 / 01:02
மேல்மருவத்தூர்: 01:25 / 01:27
விழுப்புரம்: 02:30 / 02:35
விருத்தாசலம்: 03:20 / 03:22
அரியலூர்: 04:03 / 04:05
ஸ்ரீரங்கம்: 04:58 / 05:00
திருச்சிராப்பள்ளி: 05:35 / 05:40
திண்டுக்கல்: 06:38 / 06:40
கொடைக்கானல் ரோடு: 06:56 / 06:58
மதுரை: 08:00 / 08:10
விருதுநகர்: 08:43 / 08:45
சாத்தூர்: 09:03 / 09:05
கோவில்பட்டி: 09:23 / 09:25
திருநெல்வேலி: 10:25 / 10:30
சேரன்மகாதேவி: 10:50 / 10:51
கல்லிடைக்குறிச்சி: 11:00 / 11:01
அம்பாசமுத்திரம்: 11:06 / 11:07
கீழக்கடையம்: 11:25 / 11:26
பாவூர்சத்திரம்: 11:35 / 11:36
தென்காசி: 12:30 (சனி)
முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டதால், திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் தென்காசி மார்க்கமாகச் செல்லும் பயணிகள் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயனடையலாம்.
Posts by Sakthi Paramasivan.k:
- தீப விழா; தென்காசி வழி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்!
- தென்னகத்தின் முதல் விஸ்டாடம் கோச் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
- சபரிமலை யாத்திரை; பஸ் போக்குவரத்தில் கோட்டை விடும் தமிழக அரசு!
- தென்மாவட்ட பயணிகளுக்கு ‘ஜாக்பாட்’; இந்த ரயில்களுக்கு எல்லாம் புதிய LHB பெட்டிகள்…!
- கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டிய முக்கிய நபர் சிக்கினார்!


