ரத யாத்திரையை தடுக்க சென்ற திருமாவளவன் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது!

சற்றுமுன் தமிழகம்

thirumava - 2026

ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று தமிழக எல்லையில் நுழையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த ரத யாத்திரையை தடுக்கும் வகையில் நேற்று முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளளது.

இந்த நிலையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி செல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முயன்றதாக செய்திகள் வெளிவந்தது. இதனையடுத்து அவர் நெல்லை செல்லும் வழியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டார். இதற்கு அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ரத யாத்திரைக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருமாவளவனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.