தேவைக்கு செலவழிப்பவன் புத்திசாலி.”

ஆன்மிகம்
“நேர்வழியில் பணம் சம்பாதிப்பவன் அநாவசிய 
வழியில் பணத்தை செலவிட மாட்டான்.
தேவைக்கு செலவழிப்பவன் புத்திசாலி.”

தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.1969132_763012707087106_4352134091554339462_n

 
பெரியவாளைத் தரிசித்துக் கொண்ட அரசாங்க
உத்தியோகஸ்தர் ஒருவர் தன் மனக்குறைகளை
ஸ்வாமிகளிடம் தெரிவித்தார். கடனில்லாமல்
மாதக் கடைசிவரை சமாளிக்க முடிவதில்லை
என்று தன் பணக்கஷ்டத்தை குறையாகக் கூறினார்.
 
“மற்றபடி மனைவி,மக்கள் அன்போடு தானே
இருக்கிறார்கள்” என்றார்கள் ஸ்வாமிகள்.
 
“அவர்கள் என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறார்கள்” என்றார் பக்தர்.
 
“சித்த நாழி என் பக்கத்தில் உட்கார்”
 
பக்தரும் அப்படியே செய்தார்.
 
அடுத்து ஓர் பணக்காரக் குடும்பம் வந்தது. கனி வகைகள், பூமாலை,பாதாம்,முந்திரி
இவைகள் அடங்கிய தாம்பாளத்துடன்.
 
ஸ்வாமிகளை தரிசித்து பிரஸாதம் பெற்றுக்
கொண்ட அவர், “நான் ஏழையாக இருந்திருந்தால்
மன சந்துஷ்டியுடன் இருந்திருப்பேன். எத்தனை
இருந்து என்ன மன அமைதியில்லை. என் 
பிள்ளைகளின் போக்கும் ஒன்றும் சொல்லும்படியாக
இல்லை.எல்லா கெட்ட சகவாசத்திற்கும் ஆளாகி
விட்டார்கள்.எனக்கும் சர்க்கரை வியாதி. விரும்பிய
வற்றை உண்ண முடிவதில்லை. கடைசிக் காலத்தில்
மன அமைதி இன்றி அவதிப்படுகிறோம்” என்று தன்
மன பாரத்தை இறக்கி வைத்தார்.
 
ஸ்வமிகளின் அருகிலிருந்து இவற்றை எல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தார் முதலாமவர். பணக்காரரின் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது
தன்னுடைய வாழ்க்கை ஆயிரம் மடங்கு தேவலை.
குடும்பத்தாரும் அன்புடன் நடந்து கொள்கிறார்கள்.
பிள்ளை படிப்பு முடிந்து வேலைக்கு சென்றுவிட்டால்
பணக்கஷ்டம் தீர்ந்துவிடும். பிள்ளைகள் எந்தத் தப்பு தண்டா வழிக்கும் போகாதவர்கள். மனிதன் நோயின்றி இருப்பதே பெருஞ்செல்வம்.
பணம் சந்தோஷத்தை நிர்ணயம் செய்வதில்லை.
அது மனிதனின் வாழ்க்கையை புரிந்து கொள்ளும்
முறையில் தான் இருக்கிறது என்பதை முதலாமவர்
தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டார்.
 
“நேர்வழியில் பணம் சம்பாதிப்பவன் அநாவசிய வழியில்
பணத்தை செலவிட மாட்டான்.தேவைக்கு 
செலவழிப்பவன் புத்திசாலி.” இதனை ஸ்வாமிகள் பாடமாக உணர்த்தி விட்டார்கள். ‘நான் மகிழ்ச்சியின்றி வாடுகிறேன் நான் நிம்மதியைத் தேடுகிறேன்’
என்றுதான் எல்லாரும்,முன்பே
இருக்கிற மகிழ்ச்சியை,நிம்மதியை
இழந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கரைக்கு அக்கரை பச்சை
இதில் ஏழையென்றும் செல்வரென்றும்
எவரைச் சொல்வது?’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.