“ஆற்று நீரால் அலர்ஜியைப் போக்கிய பெரியவா”
(பெரியவா ஆற்றில் ஸ்நானம் பண்ண அவர்மேல் பட்ட
ஜலம்-பக்தர் மேலும் பட்டு குணமாக்கிய சம்பவம்)
நன்றி-இன்றைய குமுதம் லைஃப்
23-08-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மகாபெரியவா 1988-ம் வருஷம் கர்னூல்ல சாதுர்மாஸ்ய
விரதம் அனுஷ்டிச்சுண்டு இருந்த காலகட்டம் அது.
அப்போ அவரை தரிசனம் பண்ணறதுக்காக, தன்
நண்பரோட வந்திருந்தார் ஒருத்தர். பேங்க்ல வேலை
பார்த்துண்டிருந்த அவருக்கு, உடல் நலத்துல ஒரு
பிரச்னை இருந்தது. வேலை விஷயமா அடிக்கடி வேற
வேற ஊருக்குப் போய்ட்டு வந்ததுல ஏதோ அலர்ஜி
ஆயிடுத்து அவருக்கு.
தூசி ஒடம்புல பட்டாலோ, சில காய்களை சாப்டாலோ
உடம்பு முழுக்க, கொப்பளம் வந்து, அரிக்க ஆரம்பிச்சுடும்.
எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பிரயோஜனமே
இல்லை. பரமாசார்யாளை மனசுல நினைச்சுப்பார்,
கொஞ்சம் குறையும். ஆனா, அடுத்ததடவை வேற ஏதாவது
அலர்ஜியாகி திரும்பவும் வந்து வாட்டும். இப்படியே
நடந்துண்டு இருந்தது. ஒரு சமயம் அவர் சொந்த ஊருக்கு
வந்தப்போ, அவரோட நண்பர்,பெரியவா சாதுர்மாஸ்ய
விரதமிருக்கிறதைச் சொல்லி, “வா தரிசனம் பண்ணிட்டு
வரலாம்”னு அழைச்சுண்டு வந்திருந்தார்.
வந்தவா, மடத்துல உள்ள பாலு மாமாகிட்டே தாங்கள்
வந்திருக்கற விஷயத்தை பெரியவாகிட்டே தெரிவிச்சு,
தரிசிக்க அனுமதி வாங்கித் தரணும்னு கேட்டா.
பாலு மாமாவும் பரமாசாரியாகிட்டேபோய் விஷயத்தைச்
சொன்னார். கொஞ்ச நேரம் கழிச்சு வெளியல வந்தார்.
வந்தவா ரெண்டு பேரையும் பார்த்து, “பெரியவா
அனுஷ்ட்டானத்துக்கு நதிக்கரைக்குப் போகப்போறா,
உங்களையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணிட்டு பிற்பாடு
தரிசனத்துக்கு வரச்சொன்னார்” அப்படின்னார்-பாலு மாமா.
“நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூம்லயே
குளிச்சுட்டோம்!” வந்தவர் தயக்கமா சொல்ல, அவரைத்
தடுத்து,”அதெல்லாம் தெரியாது. அங்கே வந்து குளிக்கச்
சொல்லி உத்தரவு ஆயிருக்கு”-கண்டிப்போட சொன்ன பாலு
இதுக்கு நடுவுல, அந்த பேங்க் ஆபீசருக்கு ஏதோ தூசி பட்டு
அலர்ஜியாகி உடம்பு பூரா கொப்பளம் வந்து அரிக்கவும்
ஆரம்பிச்சுடுத்து. இருந்தாலும் பெரியவா சொல்லிட்டா
வேற வழி இல்லைன்னுட்டு,நதிக்கரைக்குப் போனா.
அங்கே ஜலம் ரொம்ப குறைச்சலா, வாய்க்கால் மாதிரி
ஓடிண்டிருந்தது. பெரியவா ஆத்துல இறங்கினார்.
“நாமளும் கூடவே இறங்கறதா? இல்லை பெரியவா ஸ்நானம்
பண்ணினதுக்கு அப்புறம் நாம குளிக்கறதா?ன்னு தயங்கிண்டு
கரைலயே நின்னா அவா ரெண்டு பேரும்.
அதைப் பார்த்த பெரியவா, பாலுமாமாகிட்டே ஏதோ சொன்னார்
அவர் கரைக்கு ஏறிவந்து,” பெரியவா உங்களை அதோ அங்கே
இறங்கி ஸ்நானம் செய்யச் சொல்றார்.!”அப்படின்னு அல்ர்ஜியால்
அவஸ்தைப்பட்டுண்டு இருந்தவர்கிட்டே சொன்னார்.
அவரும் அங்கே போய், ஆத்துல இறங்கினார். தண்ணீர் மேலே
பட்டதும்,அவரோட உடம்பு எரிச்சல் இன்னும் அதிகமாச்சு.
இருந்தாலும் தாங்கிண்டு ஒரு முழுக்கு,ரெண்டாவது முழுக்கு
போட்டவர்,சுள்ளுன்னு இருந்த தண்ணி,ஜில்லுன்னு மாறியதை
உணர்ந்து, சட்டுன்னு திரும்பிப் பார்த்தார். அப்போதான்
பொறிதட்டினாப்புல ஒரு விஷயம் அவருக்குப் புரிஞ்சது.
பெரியவா ஸ்நானம் பண்ணி அவர் மேல பட்ட ஜலம்தான்
அங்கேர்ந்து ஓடிவந்து தன் மேலயும் பட்டு ஓடிண்டு இருக்கு.
அப்படிங்கறதுதான்.
குளிச்சுட்டு கரை ஏறினவர் உடம்பில் இருந்த சிவப்பு தடிமன்
ஏதோ தண்ணீல கரைஞ்சு போயிடுத்தோங்கற மாதிரி
குறைஞ்சு போயிருந்தது.
சரியா அதே சமயத்துல திரும்பவும் அங்கேவந்த பாலுமாமா,
“இது பெரியவா பூசிண்டு மிச்சம் இருக்கிற விபூதி. இதை
நெத்திக்கு இட்டுண்டு,ஒடம்புலயும் பூசிக்கச் சொன்னார்!”
அப்படின்னு விபூதியைத் தந்தார்.
அப்படியே செஞ்சவருக்கு கொஞ்சநஞ்சம் இருந்த அரிப்பும்
சுத்தமா போயிடுத்து. தனக்கு அலர்ஜி வந்ததுங்கறதையே
மறந்துட்டவரா, முகாமுக்குத் திரும்பி பெரியவாளை
தரிசனம் பண்ணி,கொண்டு வந்திருந்த பழங்கள்,அரிசி,
பருப்பு,,மளிகைச் சாமான்கள்னு எல்லாத்தையும்
சாதுர்மாஸ்ய பூஜைக்காக ஒப்படைச்சார்.
மறுபடியும் நண்பரோட சேர்ந்து பெரியவாளை தரிசனம்
செஞ்சு பிரசாதம் வாங்கிண்டு புறப்படத் தயாரானவரைப்
பார்த்து, “என்ன, வந்த காரியம் முடிஞ்சுதா? இனிமே
பிரச்னை வராது!” அப்படின்னு சொல்லி ஆசிர்வாதம்
செய்தார் மகாபெரியவா.
அப்போதான் அவருக்கே உறைச்சது. ‘தன்னோட
அலர்ஜியைப்பத்தி பரமாசார்யாகிட்டே ஒண்ணுமே
சொல்லலை ஆனா, தான் ஸ்நானம் பண்ற எடத்துலயே
நம்மையும் ஸ்நானம் பண்ண வைச்சு, தான் இட்டுண்ட
விபூதி மிச்சத்தையும் குடுத்து தன்னோட பலகாலத்துப்
பிரச்னையை, பனியைப் பகலவன் விரட்டறாப்புல
சட்டுனு விரட்டியிருக்கார் மகாபெரியவா!’அப்படிங்கறது.
அடுத்த விநாடியே உடம்பெல்லாம் நடுங்க, கண்ணுலேர்ந்து
ஜலம் பெருகி வழிய அப்படியே பெரியவாளோட
பாதகமலத்துல விழுந்து நமஸ்காரம் பண்ணினார்.
“பெரியவா கருணையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது!
ன்னு தழுதழுப்பா சொல்லி பிரசாதம் வாங்கிண்டு
புறப்பட்டார்.
அதற்கு அடுத்த தரம் மகாபெரியவாளை தரிசிக்க அவர்
வந்தப்போ, “பெரியவா, எனக்கு இப்போல்லாம் எந்தக்
காரணத்தாலேயும் அலர்ஜி வர்றதே இல்லை.உங்களோட
க்ருபையால பரிபூரணமா குணமாயிடுத்து!”அப்படின்னார்.
மென்மையா சிரிச்ச ஆசார்யா என்ன சொன்னார் தெரியுமா?
“நான் ஒண்ணும் பண்ணலை. எல்லாம் அந்த
சந்த்ரமௌளீஸ்வரரோட அனுக்ரஹம்!”



