இலங்கையில் உள்ள புதிய அரசு மீது நம்பிக்கையில்லை: சி.வி. விக்னேஸ்வரன்

உலகம்

CV-Vigneswaranஇலங்கைத் தமிழர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலை உள்ளதாக அந்நாட்டின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூகோ ஸ்வைர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினர். அப்போது, வடக்கில் இராணுவத்தை குறைக்காமல் மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என்றும், இந்த நிலைமை தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இங்கிலாந்து குழுவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சுன்னாகம் அகதிகள் முகாமிற்கு சென்று பார்வையிட்டனர். உயர் பாதுகாப்பு வளையம் காரணமாக முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்னைகள் குறித்தும் இங்கிலாந்து குழுவினர் கேட்டறிந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.