எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன்: சாய்பல்லவி

சினி நியூஸ் சினிமா
sai pallavi - 2026
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை சாய்பல்லவி சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்க மறுத்தார். இதுகுறித்து அவ விளக்கமளித்தபோது, “என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்றும் சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள ‘கரு’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சாய்பல்லவி தற்போது , சூர்யாவுடன் ‘என்ஜிகே’, தனுசுடன் ‘மாரி-2’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.
மேலும் ஒருசில படங்களில் நடிக்க சாய்பல்லவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.