priya varrier 2 1518430723 - 2026
ஒரே ஒரு கண்ணசைவு மற்றும் புருவ நடனம் மூலம் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ப்ரியாவாரியரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வரும் நிலையில் இயக்குனர் நலன்குமாரசாமிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் நலன்குமாரசாமி அடுத்ததாக ஒரு த்ரில் கலந்த நகைச்சுவை படத்தை இயக்கவுள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் பல நடிகைகளை நடிக்க வைக்க இயக்குனர் நலன்குமாரசாமி பரிசீலனை செய்த நிலையில் தற்போது இந்த படத்தில் ப்ரியாவாரியர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சூர்யா, ரன்வீர் சிங் படங்களில் நடிக்க ப்ரியாவாரியருக்கு அழைப்பு வந்ததாக கூறப்பட்டாலும் இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending