கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்’ படப்பிடிப்பு முடிந்தது

சினி நியூஸ் சினிமா

kadaikutti singam - 2026பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்

இந்த படத்தில் பணிபுரிந்தபோது ஒரு குடும்பமாக அனைவரும் இருந்ததாகவும், தற்போது படப்பிடிப்பு முடிந்து பிரிவதை எண்ணும்போது வருத்தமாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதை அடுத்து இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.