ரயில் பயணச்சீட்டுகள் இனி தமிழில்! அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகமாகிறது!

Published:

Rail bhavan - 2026

ரயில் பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. இதுவரையில் ஆங்கிலம் இந்தியில் இருந்த பயணச் சீட்டுகளில் இனி தமிழிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெறும். இது அனைத்து வகையான பயணச் சீட்டுகளிலும் அறிமுகம் செய்யப் படுகிறது.

இது குறித்து ரயில் பயணியர் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ள ஆசீர்வாதம் ஆச்சாரி தெரிவித்தவை…

இது அன்னை தமிழுக்கு தலை மகனின் காணிக்கை. நீண்ட முயற்சிக்குப் பிறகு ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் வந்துவிட்டது. முயற்சி திருவினையாகியது என்றுதான் சொல்ல வேண்டும்.

தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறும். இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒரு சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் சோதனை நடைபெறும். அதன் பிறகு இவ்வார இறுதி முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பல மாதங்களுக்கான தொடர் முயற்சியின் காரணமாக கிடைத்த இந்த வெற்றியை தமிழன்னையின் பொற்பாதங்களில் காணிக்கையாக்குகிறேன். மாதிரி ரயில் டிக்கெட்டில் என் அன்னைத் தமிழைக் கண்டு இன்று ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக நான் செய்த மிகப் பெரிய பணி இதுவே. என்னை இப்பணியில் ஈடுபடுத்திய பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமீத் ஷா, அரசு அதிகாரியாக இருந்த என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்த என் ஆசான் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருக்கும், இந்தக் குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் என் நன்றிகள் … என்றார்.

தமிழ் மொழியுடன் கூடிய மாதிரி ரயில் டிக்கெட்.rail ticket tamil - 2026

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img