விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் விக்ரம்-சூர்யா இயக்குனர்

Published:

vijay 62 - 2026

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் வரிசையில் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்த்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இயக்குனர் ஹரி தற்போது விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படம் குடும்பம் மற்றும் செண்டிமெண்ட் கலந்த ரொமன்ஸ் படம் என்றும் நேற்று செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஹரி இயக்கவுள்ளதாகவும், இந்த படம் அவரது வழக்கமான அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஜய் படத்தை இயக்குவது குறித்த இயக்குனர் தகவலை ஹரி, நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img