ஹாலிவுட் பாணியில் தயாராகும் படத்தில் அக்சராஹாசன்

சினி நியூஸ் சினிமா

akshara haasan 2 - 2026ஹாலிவுட் பாணியில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படம் ஒன்றில் நடிகை அக்சராஹாசன் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடித்த ‘விவேகம் படம் மூலம் அறிமுகமான கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் தற்போது இரண்டாவது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அக்சராஹாசனும் நடிக்கவுள்ளனர்.

பாடல்கள், காமெடி காட்சிகள் இல்லாத இந்த படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் பாணியில் ஆக்சன் படமாக உருவாகவுள்ளதாகவும், இந்த படத்தில் விக்ரமுக்கு மட்டுமின்றி அக்சராஹாசனுக்கு ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் இயக்குனர் ராஜேஷ் செல்வா கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இயக்குனர் ராஜேஷ் செல்வா கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.