காஷ்மீரில் ஒட்டுமொத்த பாஜக., அமைச்சர்களும் ராஜினாமா!

இந்தியா சற்றுமுன்

amit shah mufti - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முகமாக, மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளதால், பாஜக.,வைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்வர் மெஹபூபாவின் அமைச்சரவையில் தற்போது உள்ள 9 பாஜக அமைச்சர்களும் இதனால் ராஜினமா செய்துள்ளனர். இவர்களை ராஜினாமா செய்யுமாறு பாஜக., கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து அவர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவரிடம் செவ்வாய்க்கிழமை நேற்று மாலை அளித்தனர். மாநில துணை முதல்வர் நிர்மல் சிங்கும் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கவே என்றும், இது கூட்டணியில் இருந்து விலகுவதாக அர்த்தம் இல்லை என்றும் பாஜக., தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.