நிர்மலாதேவிக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்: ரஜினிகாந்த்

சற்றுமுன் தமிழகம்

rajinikanth power - 2026அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து இன்று ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்தார்.

இன்று அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனைக்காக செல்லவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ”நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குபின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்கள் குறித்து கூறிய கருத்து தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் இரண்டாவது கருத்தே கிடையாது.

மேலும் சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அதே நேரத்தில் சட்டம் தன் கையில் இருப்பதால் போலீசார் வரம்பு மீறுவதும் தவறும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் கட்சி தொடங்குவது உறுதி என்றும், ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும், கட்சி தொடங்கும் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.