baby 1 1 - 2026

அதிர்ச்சி! பிறந்து 40 நாளான குழந்தை வயிற்றில் கரு..!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
baby 1 1 - 2026

பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியில் உள்ள ரஹ்மானியா மருத்துவ மையத்தில் பிறந்து 40 நாட்களான ஆண் குழந்தை ஒன்றை கொண்டு சென்றுள்ளனர் .

அதன் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் குழந்தை முறையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்க மருத்துவர் அந்த குழந்தையை பரிசோதித்து உள்ளார்.

அப்போது வீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அறிய குழந்தை மருத்துவர் சிசிடிவி ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதன் முடிவில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது.

Embryo - 2026

குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த மருத்துவர் “அரிய வகையான இயற்கையில் நடக்கக்கூடிய நிகழ்வு இது. இதனை கருவுக்குள் கரு என்று கூறுகின்றனர்.

5 லட்சம் பேரில் ஒருவருக்கு இதுபோன்று ஏற்படுகின்றது. அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு தற்போது குழந்தையின் உடல் சீராக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.