பிரபல டென்னில் வீராங்கனை சானிய மிர்சா தான் கர்ப்பமாக உள்ளதை அழகான புகைப்படம் ஒன்றை பதிவிட்டதன் மூலம் உறுதி செய்துள்ளார்.

1986ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்த சானியா, நாடு முழுவது பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தனது 16 வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றதும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். 2003ம் ஆண்டு தொடங்கி 2012ல் ஒற்றையர் போட்டியில் ஓய்வு பெறும் வரை நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற தரவரிசையில் இருந்தார்.
இவரது சுய சரிதை நூலான ‘ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ் புத்தத்தில் இவரை பற்றிய பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. தெலுங்கானாவில் தன் பெயரில் சர்வதேச தரத்திலான டென்னிஸ் அகாடமி நடத்தி வருகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயாப் மாலிகைக்கை காதலித்து திருணம் செய்து கொண்ட இவர், தற்போது கர்ப்பமாக உள்ளதை டுவிட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.



