அஜித்-விஜய் ரசிகர்கள் இணைந்து செய்த நல்ல காரியம்

சினி நியூஸ் சினிமா

ajith vijay1 - 2026கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் குழாயடி சண்டையை விட கேவலமாக சண்டையிட்டு வருவது தெரிந்ததே. அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கும் நிலையில் அவர்களது ரசிகர்கள் எப்போது சமாதானம் ஆவார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதில் இருந்தது.

இந்த நிலையில் அதற்கு பிள்ளையார் சுழி போடுவதைபோல் தற்போது அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து ஒரு நல்ல காரியத்தை செய்து முடித்துள்ளனர்.

ஆம், கடந்த மே 1ஆம் தேதி தல பிறந்த நாளில் விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் உதவியுடன் மைலாபூரில் உள்ள அன்னை இல்லம் என்ற முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு டிகர் விஜய் ஆன்லைன் வெல்ஃபேர் கிளப் ஏற்பாடு செய்திருந்தது. இதேபோல் ஒற்றுமையுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து விஜய்-அஜித் ரசிகர்களும் பல்வேறு சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.