ஐபிஎல்: வாழ்வா சாவா நிலையில் களமிறங்கும் பெங்களூரு ….வெற்றி கிட்டுமா?

சற்றுமுன் விளையாட்டு

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கனே வில்

ipl May7 01 - 2026

லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை. விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி உள்ளது. இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 6 முறையும், பெங்களூரு அணி 4 தடவையும் வென்று இருக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளும் மோதுவது இது முதல்முறையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.