மறைந்த நடிகர் முரளியின் மகனும் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகருமான அதர்வா, முதன்முதலாக தயாரித்துள்ள திரைப்படம் ‘செம போத ஆகாதே. இந்த படத்தை அதர்வாவின் முதல் படமான ‘பாணா காத்தாடி’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் ‘செம போத ஆகாதே’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மே மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அதர்வா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
மேலும் இதே மே 18ஆம் தேதியில் தான் விஜய் ஆண்டனியின் ‘காளி’ மற்றும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டனின் படங்களோடு மோத முடிவு செய்துவிட்ட அதர்வாவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அதர்வா, மிஷ்தி, அர்ஜெய், விரோஷன், அனைகா சோட்டி, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.