இட ஒதுக்கீட்டுக்கு எதிரான திமுக., வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

இந்தியா சற்றுமுன் சென்னை
12 Aug 05 High court - 2026

சென்னை: பொருளாதார ரீதியாக பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக விளக்கம் கேட்டது நீதிமன்றம். அதற்கு, இது அரசியல் நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இடஒதுக்கீடு தொடர்பாக 2 வாரங்களில் எழுத்து பூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.