லயோலா கல்லூரி மீது குவியும் புகார்கள்! ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?!

Published:

police complaint - 2026

ஹிந்து மத கடவுளர்களையும், மத்திய அரசு, மோடி, பாஜக., ஆர்.எஸ்.எஸ்., இயக்கங்கள் குறித்தும் அவதூறு கிளப்பும் வகையில் கண்காட்சி நிகழ்ச்சி நடத்திய சென்னை லயோலா கல்லூரி மீது புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பலரும் தங்களது மனக்குமுறல்களை ஜனநாயக ரீதியில், தங்களுக்கு உரிய கருத்துச் சுதந்திர உரிமையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

லயோலா கல்லூரிக்கு எதிராக எப்படி ஆன்லைனில் புகார் செய்வது என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் விளக்கி வருகின்றனர் பலர்! இது தொடர்பாக, சமூகத் தளங்களில் பரப்பப் படும் விளக்கம்…

முதலில் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்தில் செல்லுங்கள்.
https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3

மேற்கண்ட லிங்க் மூலம் உங்கள் புகார்களைப் பதிவு செய்யுங்கள்.

Details to be filled:
District – Chennai City
Chennai District – Chennai CCB
Details of the Complainant – GIVE YOUR DETAILS
Details of Complaint:
Subject – OFFENSES AGAINST RELIGION AND PUBLIC WORSHIP
Date of Occurence: 19.01.2019
Place of Occurrence: Loyola College, Nungambakkam.
Description: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் சென்ற வெள்ளிக்கிழமை (19.01.2019) அன்று தொடங்கி நடைபெற்ற ‘வீதி திருவிழா’ என்னும் நிகழ்ச்சியில் காட்சிக்காக வைக்கபட்டிருக்கும் படங்களில் அப்பட்டமான இந்து மத விரோதமும், இந்து கடவுகளர்களையும், இந்து மத சின்னங்களையும் சிறுமைப்படுத்தியும், இழிவுபடுத்தியும் வரைந்து இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது. சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டவர்களை இந்திய தண்டனை சட்டம் 153 (A) மற்றும் 295 (A) அடிப்படையில் கைது செய்து அந்தப் படங்களையும் அகற்றுவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

என்று… முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்கள் வழியே புகார் பதிவு குறித்து விளக்கி வருகின்றனர் பலர்.!

Related articles

Recent articles

spot_img