புடினுடன் ஆலோசனை: அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

இந்தியா உலகம் சற்றுமுன்

modi 7593 - 2026

புது தில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வரும் மே 21ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்கிறார்.

சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளும். ரஷ்ய இந்திய இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.