காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

stalin 1 - 2026

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் காவிரி பிரச்னை குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக., கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…

அரசியல் காரணங்களுக்காகவும், தேர்தல் லாபத்திற்காகவும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வந்த மத்திய பா.ஜ.க. அரசு, கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்கிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

நீதிமன்றத்தின் தொடர்ச்சியான கண்டனங்களிலிருந்து தப்பிக்கின்ற வகையில், தனது வரைவுத் திட்ட விவரங்களை சமர்ப்பித்திருக்கும் மத்திய அரசு, அதனை முழுமையாக எப்போது நடைமுறைப்படுத்த போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களும், காவிரி டெல்டா விவசாயிகளும் எதிர்பார்ப்பது, நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், முழுமையான அதிகாரமிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசு, வாரியத்திற்குப் பதிலாக ஆணையம், குழு என்றெல்லாம் மாற்றுவழிகள் கொண்ட பெயர்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தக்க பதிலளித்து, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக எந்த அமைப்பையும் ஏற்க இயலாது என வலியுறுத்த வேண்டிய கடமை, மாநிலத்தை ஆளும் அ.தி. மு.க. அரசுக்கு இருக்கிறது.

தவிடு தின்கிற ராஜாவுக்கு முறம் பிடிக்கின்ற மந்திரிகள் என்பதுபோல, தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு முன்வைக்கின்ற திட்டங்களையெல்லாம் வரவேற்கும் அ.தி.மு.க. அரசு, காவிரி உரிமை விவகாரத்திலும் தொடர்ந்து இதேபோக்கில் செயல்படாமல், மே 16-ந் தேதி நடைபெறும் விசாரணையில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்து வைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

காவிரி மேலாண்மை வாரியத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற டெல்டா விவசாயிகள், மத்திய அரசின் வரைவுத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அந்த வரைவுத் திட்டத்துக்கு ஆதரவாக டெல்லியில் கருத்து தெரிவித்த தமிழக சட்ட அமைச்சரின் அறியாமையையும் எள்ளி நகையாடுகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு, இனியும் கால அவகாசம் வழங்காமல், முழு அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க ஆவன செய்யவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கடைசிகட்ட எதிர்பார்ப்பாகும்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் அமைப்பான நடுவர் மன்றம் அமைய, அயராது பாடுபட்டு வெற்றிகண்ட கருணாநிதி வழியில், நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அம்சங்களை செயல்படுத்துவதற்கு, தி.மு.க. தொடர்ந்து செயல்படும். காவிரி விவகாரத்தில் எவ்வித அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம்தராமல், தமிழ்நாட்டின் நலன் ஒன்றையே கருத்திற்கொண்டு செயல்படும் வகையில், மேலாண்மை வாரியத்தை அமைக்கச் செய்யவும், சட்ட ரீதியாக அதனை செயல்படுத்தவும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநிலத்தின் சார்பில் வலியுறுத்தவும், நாளையே (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் அனைத்துக்கட்சிகள், அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தை அ.தி.முக. அரசு கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன். – என்று கூறியுள்ளார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories