கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

143

karnataka elections - 2026

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், துவக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. ஆனாலும், பாஜக. காங்கிரஸ் இரண்டுமே சரி சமான அளவில் முன்னிலை பெற்று வந்தன. அதற்குச் சற்று குறைவாக மூன்றாம் இடத்தை மதசார்பற்ற ஜனதா தளம் பெற்று வந்தது. எனவே, அடுத்த ஆட்சி நிச்சயம் மஜத., தலைவர் தேவ கௌடவின் கையில்தான் இருக்கிறது.

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற 113 உறுப்பினர் ஆதரவு தேவை. எனவே, தேவகௌட யாருடன் கூட்டணி வைக்கிறாரோ அவர்களே ஆட்சியில் அமர வாய்ப்பு உள்ளது என்பதால், இப்போது தேவகௌட கிங் மேக்கராக உருவாகியுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.