ஷாருக்கானுக்கு தனுஷ் செய்த உதவி

சினி நியூஸ் சினிமா

zero - 2026

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறிமுகமானவர் தனுஷ் என்பது தெரிந்ததே. தனுஷ் நடித்த இரண்டு இந்தி படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் தனுஷ், பாலிவுட்டின் செல்லப்பிள்ளையாக கருதப்படுகிறார்

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீரோ’ என்ற படத்தின் டீசரை தனுஷ் வெளியிடவுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த கேரக்டரை கடந்த முப்பது வருடங்களுக்கு முன்பே கமல்ஹாசன் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

zero1 - 2026அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நாயகிகளாக நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.