
நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் தொடர்ந்து பலமாதங்களாக வறண்டு கிடந்த குண்டாறு அணை 7 நாட்களில் 36.10 அடி முழுமையாக நிரம்பியது.
அணைக்கு வரும் தண்ணீர் மறுகால் வழியே வெளியேறுகிறது. மறுகால் பகுதியில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் செங்கோட்டை சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் அணைக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை முதன் முதலில் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



