கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

புதுச்சேரி பெரியார் நகர் பகுதியில் 7 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த 3 பேர்; சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு ரெடியார்பாளையம் போலீசார் விசாரணை!

காஞ்சிபுரம் மதுராந்தகத்தைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவன ஊழியர் பால சுப்பிரமணியம். இவர் தனது நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்ட மருந்திற்கு தேவையான பணத்தை வாரம் ஒருமுறை இங்கு வந்து வசூல் செய்து கொண்டு சென்று வந்துள்ளார்.

அதன்படி நேற்று காலை புதுச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் பல்வேறு மருந்துக் கடைகளில் இருந்து பணத்தை வசூலித்துக் கொண்டு இரவு 10 மணியளவில் தந்தை பெரியார் நகர் வழியாக வந்துள்ளார் .

அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 7 லட்சத்தை வழிப்பறி செய்து சென்றது.

சிசிடிவி பதிவில் அவர் தன்னிடம் உள்ள பணத்தை காப்பற்றப் போராடியுள்ளார். ஆனால் கத்தியை வைத்து அவரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியோடினர்.

மூன்று பேரில் ஒருவன் கத்தியை வைத்து அவரை பலமாகத் தாக்கியும் அவர் பணப் பையை விடவில்லை. கடுமையாகத் தாக்கியதால் அவர் பையை விட்டுவிடுகின்றார். இதனை அடுத்து 7 லட்சம் ரூபாய் பணத்துடன் மூவரும் தப்பிச் செல்கின்றனர்.

இதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

1 thought on “கத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.