லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ்!

Published:

Pineapple Fried Rice - 2026

பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
பைன் ஆப்பிள் – ஒரு கப்
கேரட் – ஒன்று
குடை மிளகாய் – பாதி
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
மல்லி தழை, புதினா – ஒரு கப்
இஞ்சி – ஒரு வில்லை
பூண்டு – 5 பல்
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தாளிக்க
உப்பு – தேவைக்கு
உதிரியாய் வடித்த சாதம் – 2 கப்

செய்முறை
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு பொடி பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

நறுக்கி வைத்துள்ள கேரட் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி சிறிது நேரம் வேக விடவும். பின் தக்காளியை போட்டு நன்கு வதக்கி விடவும்.

இப்போது அன்னாசி, புதினா, மற்றும் மல்லி தழையை சேர்த்து 5 நிமிடம் கழித்து உப்பும், கரம் மசாலாவும் சேர்த்து சுருள வதக்கவும்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

கடாயை அணைக்காமலேயே வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சூடான, சுவை மிகுந்த பைன் ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

Related articles

Recent articles

spot_img