திருமண பந்தம் பிணைத்தது தீபிகா படுகோன் ரன்வீர் சிங் ஜோடிகளை! முதல் புகைப்படம் வெளியீடு!

இந்தியா சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
ranveersingh deepika padukone - 2026

பிரபல ஹிந்தி சினிமா நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமண நிகழ்வுக்கு செல்போன்கள் கொண்டு செல்ல தடை இருந்ததால், திருமண புகைப்படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் முதல் புகைப்படம் ஒன்று அதிகாரபூர்வமாக வெளியானது.

ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

கொங்கனி கலாச்சாரப்படி அதிகாலையில் ரன்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் நடைபெற்றது. பின் வரும் வியாழக்கிழமை சிந்தி கலாச்சார முறைப்படி திருமணம் நடக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.