
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இந்த முறை அடிப்படை வசதிகள் கூட சரியாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சபரிமலை சந்நிதி நேற்று திறக்கப் பட்டதில் இருந்து, மீண்டும் சர்ச்சைகள் தொடங்கியுள்ளன.
சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால், அனுமதிக்க மாட்டோம் என்றும், இது அரசு நிர்வாகம் செய்யும் டூரிஸ்ட் ஸ்பாட் அல்ல என்றும் கூறி ஐயப்ப பக்தர்கள் உணர்வுகளுடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சபரிமலைக்கு பிக்னிக் ஸ்பாட் போல், சுற்றுலாவாக சென்று வருவேன் என்று சொல்லி நேற்று அதிகாலை கொச்சின் விமான நிலையத்தில் இறங்கிய திருப்தி தேசாய் என்ற கம்யூனிஸ பெண், மற்றும் ஆறுபேரை விமான நிலையத்தை விட்டே வெளியேறவிட வில்லை போராட்டம் நடத்தும் பக்தர்கள்!
13 மணி நேரம் விமான நிலைய வாசலைக்கூட திருப்தி தேசாயால் தாண்ட முடியவில்லை.!
எந்த வாடகை டாக்ஸி ஓட்டுநர்களும் திருப்தி தேசாயை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர்…
மேலும் எந்த ஒரு ஓட்டல் உரிமையாளரும் அவருக்கு தங்குவதற்கான அறை தர மறுத்து விட்டனர்.
ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால் திருப்தி இல்லாமல் திரும்பி சென்றால் திருப்தி தேசாய்!

விமான நிலையம் எங்கும் பெண்கள் குழந்தைகளின் தொடர் சரண கோஷம். மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோதும், அங்கும் ஐயப்ப சரணகோஷங்களையே திருப்தி தேசாயால் கேட்க முடிந்தது.
இத்தனை நிகழ்வுக்கும் பழி வாங்கும் வகையில், கேரள கம்யூனிஸ அரசு, சபரிமலை வரும் பக்தர்களுக்கு குடிநீர், இருப்பிடம், கழிவறை உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்து கொடுக்கவில்லை. தேவஸ்வம் போர்டு தலைமையெடுத்துச் செய்ய வேண்டிய பல பணிகள், வெறுமனே கிடக்கின்றன.
அரவனை பிரசாதம் தயாரிப்பதிலும், தேங்காய்களை ஏலம் விட்டு பணம் பார்ப்பதிலும், நெய்யை எடுப்பதிலும் கவனம் செலுத்தி வரும் தேவஸ்வம் போர்டு, அவ்வளவுக்கு பணத்தைக் கொட்டிச் செல்லும் பக்தர்களுக்கு எந்த வித வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று குறை கூறுகிறார்கள்.
இதனை, ஒரு புகைப்படமே வெளிப்படுத்தியிருக்கிறது. குப்பைத் தொட்டியில் தலை சாய்த்து ஐயப்ப பக்தையாம சிறுமி ஒருத்தி ஓய்வு எடுக்கும் புகைப்படம், கேரள அரசின் கையாலாகாத் தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

ஏற்கெனவே, பம்பை நதியை சுத்தப் படுத்தும் பணியில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களே முழுவதும் களம் இறங்கியிருந்தனர். நதியில் போட்டுச் செல்லப்படும் துணிமணிகளை அப்புறப் படுத்தி, பம்பையை தூய்மைப் படுத்தினர். இவை எல்லாம் பம்பை நிர்வாகமும், தேவஸ்வம் போர்டும் செய்திருக்க வேண்டியவை. ஆனால், சமூக தொண்டர்களே செய்தார்கள்.