
முறைப்படி விரதமிருந்து ஐயப்ப தரிசனத்திற்காக சபரிமலை சென்ற “இந்து ஐக்கிய வேதி” (கேரள ஹிந்து முன்னணி) சசிகலா டீச்சர் (வயது 55) பினராயி அரசால் கைது செய்யப்பட்டு ரண்ணி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் இன்று கேரளாவில் முழுஅடைப்பு நடத்தப் படுகிறது.
இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே பி சசிகலா சனிக்கிழமை இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சபரி மலைக்குச் செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை இரவு தடுக்கப்பட்ட அவர், சனிக்கிழமை இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மரக்கூட்டம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சசிகலா திரும்பிச் செல்ல மறுத்து விட்டதாகவும் அதன் காரணத்தாலேயே கைது செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிச் செல்வதாக சசிகலா போலீசாரிடம் கூறியுள்ளார் சம்ரக்ஷண சமிதி மாநில தலைவர் பிரித்திவி பால் மற்றும் பாஜக தலைவர் பி சுதீர் ஆகியோரும் பம்பையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சபரிமலைக்குச் சென்று போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்று போலீசார் கருதியதே கைது செய்யப்படக் காரணம் என்கிறார்கள்.
சசிகலா தமக்கு 50 வயது நிறைவடைந்து விட்டது என்றும் தாம் சபரிமலை ஐயப்பனின் தீவிர பக் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார் ஆனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடன் சசிகலா கூட்டத்தை கூட்டி, போராட தூண்டுவார் என்று போலீசார் கருதினர். அதன் காரணத்தாலேயே சசிகலாவை திரும்பிச் செல்லுமாறு வற்புறுத்தினர். ஆனால் சசிகலா மறுத்துவிட்டது எடுத்து அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது
சசிகலா அதன் பின்னர் ரண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சபரிமலையில் இதை அடுத்து பெரிய போராட்டம் அரங்கேற்றியது
இந்நிலையில் இன்று கேரளா முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது முழு கடையடைப்பு போராட்டமும் சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன, காவல் நிலையங் களுக்கு பேரணியாக சென்று மனு கொடுக்கும் போராட்டங்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சபரிமலைக்கு பிக்னிக்காக வருவேன், சுற்றுலாத் தலம் போல் வருவேன். எனக்கு சபரிமலை ஐயப்பன் மீது நம்பிக்கை கிடையாது. இருமுடி கட்ட மாட்டேன். குருசாமி எல்லாம் கிடையாது என்றெல்லாம் கூறிக் கொண்டு, உள்நோக்கத்துடன் வந்த திருப்தி தேசாய் என்ற பெண்ணுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது கம்யூனிஸ்ட் அரசு.
ஆனால், அந்த திருப்தி தேசாயால், கொச்சின் விமான நிலைய வாசலைக்கூட 13 மணி நேரமாக தாண்டக் கூட முடியவில்லை. வாடகை டாக்ஸி ஓட்டுநர்களும் திருப்தி தேசாயை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர் . மேலும் எந்த ஒரு ஓட்டல் உரிமையாளர்களும் அறை தர மறுத்து விட்டனர். ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்தி இல்லாமல் திரும்பி செல்கிறேன் என்று கூறி மும்பைக்கு திரும்பினார் திருப்தி தேசாய். விமான நிலையம் எங்கும் பெண்கள் குழந்தைகளின் தொடர் சரணகோஷம் ஒலித்தது. அது மும்பை விமான நிலையத்திலும் எதிரொலித்தது.