மதுரை: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை! இந்த நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி, சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி. ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நேயர்கள், சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பப் பிரச்னைகள் குறித்த விஷயங்கள் அலசப் படுகின்றது. இதற்காக பிரச்னை நிலவும் இரு தரப்பினரையும் நேரடியாக அழைத்து அமர வைத்து, விவாதம் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கேமராவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி, சாதாரணமாக பேசும் விஷயங்களை பதிவு செய்து, பின்னர் அவற்றையே நிகழ்ச்சியில் ஒளிபரப்பி விடுகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், குடும்ப விஷயங்களை பொதுவில் அலசுவதுபோல இருந்தாலும், இதனால் தனிமனித வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து விருதுநகரைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதாக உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜீ தமிழ் டி.வியில் வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.





நலà¯à®² விஷயமà¯.