தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களில் வன்முறையைத் தூண்டிவிட்டு, வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஏராளமானோரை போலீஸ் கைது செய்து வருகின்றனர். ஆயினும் கலவரத்துக்கு வித்திட்ட பனிமய மாதா ஆலயம் அருகில்கூட போலீஸார் எவரும் செல்லவில்லை. இருப்பினும், போலீஸார் கைது செய்து வரும் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் என்று அடையாளம் காணப்படுவோரை, வழக்கறிஞர்கள் குழு ஒன்று உடனுக்குடன் ஜாமீனில் வெளியில் எடுத்து வருகிறது.
இருப்பினும், போலீஸார் கொடுத்த அறிக்கையில், நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட நக்ஸல் அமைப்புகளை அடையாளம் காட்டியுள்ளதால், போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ரத்தினபுரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவை சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போராட்டத்தில் வெடித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




