கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டித்து தென்காசி அருகே நவ.21ல் ஆர்ப்பாட்டம்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

police in sabarimala - 2026

தென்காசி: சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசு மேற்கொண்டு வரும் அடக்குமுறைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நெல்லை மேற்கு மாவட்ட பாஜக., சார்பில், வரும் நவ.21 புதன்கிழமை அன்று மாலை 3.45 மணி அளவில் தென்காசி அருகே உள்ள மேலகரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் கேரள கம்யூனிஸ்ட் அரசு பினராயி விஜயன் நிர்வாகத்தைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியின் கேரள நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும் ஓர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஐயப்ப பக்தர்கள், இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக., வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை நெல்லை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் பேச்சிமுத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.