நிவாரணப் பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்று அமைச்சர விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கபடுகிறது. மாறாக தனியார் பேரூந்துகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல கட்டணமில்லாமல் இலவசமாக சேவையாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.
இதனையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அரசு பேருந்தில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்றும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் மூலம் நிவாரண பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



