ஸ்டாலின் நடைபயணத்தில் குழந்தைக்கு கனிமொழி என பெயர் சூட்டினார்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று இரண்டாம் நாளாக நடைபயணமாகச் சென்றபடி, கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பாலத்துறையில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் தவுட்டுப்பாளையம் சென்ற மு.க.ஸ்டாலினை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனா். . பின்னா் மு.க.ஸ்டாலினுடன் பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பிறந்த சில நாட்களே ஆன பெண் குழந்தைக்கு தனத தங்கையின் பெயரான கனிமொழி என்ற பெயரை குழந்தைக்கு சூட்டி வாழ்த்தினார். தொடா்ந்து அந்த பகுதியில் உள்ள கூரைக்கடையில் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.



