வரும் ஜூன் மாதம் தமிழகத்தில் 10 புதிய தொழிறிசாலைகள் தொடங்கப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது. புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது; அது, தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தி.மு.க. தான் கடந்த காலங்களில் மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது உலகறிந்த விசயம்! அதிமுக அப்படியல்ல! நாங்கள் மைனாரிட்டி ஆட்சி நடத்தவில்லை.
தமிழகத்தில் மாணவர்கள் சிறப்பாக படிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே திறமையின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்றார் முதல்வர்.



