ஷிப்பிங் கம்பெனி அறிவித்த திவால் நோட்டீஸால் தூத்துக்குடியில் பரபரப்பு

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல் வணிகம்
tuticorin port - 2026

தூத்துக்குடியில் பிரபல ஷிப்பிங் கம்பெனி திவால் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயிண்ட் ஜான் ஃப்ரெய்ட் சிஸ்டம் என்ற ஷிப்பிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 1979ம் ஆண்டில் துவங்கப்பட்டது. 20 நாடுகளில் சுமார் 58 அலுவலகங்களில் 1400க்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வந்தனர்.

தென் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷிப்பிங் நிறுவனமாக செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குநராக தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த ஜான்சன் இருந்து வருகிறார். 

இந்நிலையில், செயிண்ட் ஜான் ஃப்ரெய்ட் சிஸ்டம் நிறுவனம் ஐ.பி.பி.ஐ., மூலம் திவால் நோட்டீசை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில், பங்கு முதலீட்டு கடன் 5.46 கோடி மற்றும் 26 வங்கி கடன்கள் மூலம் 318.26 கோடி கடன்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் தூத்துக்குடி ஷிப்பிங் வட்டாரத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.