நாகர்கோவில் மேம்பாலத்தின் மேல் மகிழ்ச்சி பொங்க நின்று நகரை ரசித்த பொதுமக்கள்!

சற்றுமுன் தமிழகம் துணுக்குகள் நெல்லை லைஃப் ஸ்டைல்
IMG 20181215 WA0073 - 2026
நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் மேல் அமர்ந்து ரசிக்கும் பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் கனவு திட்டமான பார்வதிபுரம் மேம்பாலப் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவுற்று பாலம் வாகனப் போக்கு வரத்துக்காக திறக்கப்பட்ட பின்னர் இந்தப் பாலத்தின் மேல் சென்று பார்ப்பது இயலாத காரியம்.

எனவே உங்கள் கனவுத் திட்டம் ஆகிய இந்த பாலத்தின் மேல் நீங்கள் நடந்து சென்று பார்ப்பதற்கும் குழந்தைகளுக்கு நாகர்கோவில் நகரின் எழில்மிகு காட்சியை கண்டு களிப்பதற்கும் வசதியாக சனிக்கிழமை இன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட அனுமதிக்கப்படுகிறது

IMG 20181215 WA0072 - 2026

இந்த நிகழ்ச்சியில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி இன்று மாலை ஆயிரக்கணக்கான நாகர்கோவில் வாழ் மக்கள் பார்வதிபுரம் மேம்பாலத்தின் மேல் தளத்தில் நின்று நாகர்கோவில் நகரின் எழில்மிகு காட்சியை கண்டு ரசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.