3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சென்னை
Screenshot 20181212 202350 WhatsApp - 2026

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய நெடுஞ்சாலையில் செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அனுமதி கிடைத்த நிலையில், முன்னேற்பாடுகள் காரணமாக பிரமாண்ட லாரியில் ஏற்றப்பட்டு புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலை சீரடைந்ததால், பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை செஞ்சியை நோக்கி பயணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.