மெழுகாய் நின்ற ஸ்ரீதேவி! துசாட்ஸ் அருங்காட்சியகம்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா பொது தகவல்கள்
sridevi - 2026

உலகப்புகழ் பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன.

sridevi 1 - 2026

நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் சார்பில் இது குறித்த அறிவிப்பையும், சிலையின் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்கள்.

- 2026

அதில், “பாலிவுட்டின் ஐகான் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் அவரது மெழுகுச் சிலையை அமைக்க உள்ளோம். சிங்கப்பூர் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு அது ஒரு தனிப்பட்ட சேர்க்கையாக இருக்கும். உலகத்திலேயே அவரது வடிவம் ஒரு தனித்துவமானது,” என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

நேற்று அது பற்றி டுவீட் செய்த போனி கபூர், “ஸ்ரீதேவி எங்களது இதயத்தில் மட்டும் வாழவில்லை, மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஸ்ரீதேவியின் சிலையைப் பார்க்க ஆவலுடன் காத்துள்ளோம்,” என தெரிவித்திருந்தார்.சற்று முன்னர் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.