தங்கம்..! 30 ஆயிரத்தைக் கடந்த பவுன் ரேட்!

Published:

gold rate - 2026

ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரத்தைத் தாண்டியது! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்வு! ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 3,765-க்கும் ஒரு சவரன் ரூ 30,120-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

சென்னையில் நேற்று வர்த்தக நேர முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து ரூ.29,832 என இருந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்தது.

gold shop - 2026

இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30,120 என உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.36 உயர்ந்து ரூ.3,765 க்கு விற்பனையானது!

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது.

மேலும், உலக அளவில் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு என்று கருதி, முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்துக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. எனவே விலையும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img