ஒருவழியா… விஷாலுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆய்டிச்சு! இனிமே எல்லாம் சரியாய்டும்!

அடடே... அப்படியா? கிசுகிசு சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
vishal i will continue to - 2026

2004ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பிரபல திரைப்பட தயாரிபபாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமுரு, சிலப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, தீராத விளையாட்டு பிள்ளை, சமர், அவன் இவன், இரும்புத்திரை, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராகவும் தேர்வானார். இடையில் அரசியல் ஆசையில் ஆர்.கே.நகரில் போட்டியிட மனு செய்து, பின்வாங்கினார்.

நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என விஷால் சூளுரை எடுத்திருந்தார். இந்த பணிகள் வரும் ஏப்ரலில் முடிவடையும் என தெரிகிறது. இந்நிலையில் விஷாலுக்கு பெண் பார்க்கும் முயற்சியில் அவரது பெற்றோர் ஈடுபட்டு வந்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மணப்பெண் பெயர் அனிஷா.

விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதற்காக நிச்சயதார்த்த தேதியை ஐதராபாத் சென்று மணப்பெண் குடும்பத்தினரிடம் பேசி முடிவு செய்ய உள்ளார்கள். எனவே இனி விஷாலுக்கு மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் எல்லாவற்றுக்கும் எல்லாமே சரியாகி விடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.