April 21, 2025, 4:36 PM
34.3 C
Chennai

ஒமிக்ரான்: மீண்டும் எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!

தென் ஆப்பிரிக்கவின் போட்ஸ்வானாவில் நவம்பர் 11-ம் தேதியன்று ஒரு பயணியிடம் முதல் முதலாக புதிய வகை கொரோனா உருமாற்றத்தைக் கண்டு ஆய்வாளர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பால் ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 என்ற இந்த புதிய வகை உருமாறிய கொரோனோ வைரஸ், உருமாறிய டெல்டா வைரசை விடவும் அபாயகரமானதாக கருதப்படுகிறது.

தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாமலும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி விட்டு இது பாதிக்கக் கூடியதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மிகவும் வேகமாகப் பரவக் கூடியதாகவும், நோய் முற்றி தீவிரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய அளவுக்கோ அல்லது மரணத்தையும் விளைவிக்கக் கூடியதாகவோ இருக்கலாம் என்பதால் இது கவலைக்குரிய விஷயம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

டெல்டா வைரஸ் அதன் ஸ்பைக் புரோட்டினில் 9 வகையில் தான் உருமாற்றம் கொண்டது. ஆனால் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரோட்டீனில் மிக அதிக அளவாக 32 வகைகளில் உருமாற்றமடைந்துள்ளது.

ALSO READ:  வங்கதேச ஹிந்துக்கள் பாதுகாப்பு பற்றி ஆர்.எஸ்.எஸ் தீர்மானம்!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹாங்காங், இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியத்திற்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.

துருக்கி வழியாக எகிப்து சென்று விட்டு பெல்ஜியத்திற்கு வந்த ஒரு இளம் பெண்ணுக்கு ப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

தடுப்பூசி போடாத அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அந்தப்பெண்ணுக்கு தென் ஆப்பிரிக்காவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், புதிய வைரஸ் உலகில் பரவத் தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.

டெல்டா வைரசின் மரபணு மாற்ற தொடர்ச்சி என்று கூற இயலாத புதிய வடிவம் எடுத்துள்ளது ஒமிக்ரான். இதன் உருமாற்றத்தை அடையாளப்படுத்த சிவப்பு, பர்ப்பிள், மஞ்சள், நீலம், பச்சை என்று நிறங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு என்பது அதி தீவிரமான நிலை என்றும், பச்சை என்பது குறைந்தபட்ச பாதிப்பை உண்டாக்க கூடியதாகவும் மருத்துவ நிபுணர்கள் அடையாளப்படுத்தி உள்ளனர்.

ALSO READ:  ‘தமிழ் வாழ்க’ எழுத்துகளுடன் மாலையிட்டு அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை!

புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகள் அதனை ஆராய்ந்து அறிந்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் வெளியாக சில வாரங்கள் ஆகலாம் என்று உள்ள நிலையில், ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்ககைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இந்தியாவும் தென் ஆப்பிரிக்கா உள்பட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கடுமையான பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாறுபட்ட கொரோனா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்தால், விரிவான பரிசோதனை கட்டமைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு Corticosteroids மற்றும் IL6 Receptor Blockers உள்ளிட்ட மருத்துவமுறைகளை மீண்டும் ஒருமுறை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது.

ALSO READ:  கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin - அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: அதிரடி காட்டிய ரோஹித், கோலி!

          ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். 

கூட்டணி விஷயத்தில் பாஜக., அவசரப்பட்டு விட்டதா?

அதிமுக-பாஜக கூட்டணி 2026 வரை நிலைக்குமா? பாஜக அவசரப்பட்டு விட்டதா?

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பட்லர் அடிச்ச அடி… பராக்கு பாத்த டெல்லி அணி!

          குஜராத் அணியின் மட்டையாளர், மூன்று ரன்னில் சதத்தைத் தவறவில்ல்ட ஜாஸ் பட்லர் இன்றைய ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில்!

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

சுமங்கலி கேபிள் விஷன், ரெட் ஜெயண்ட் வரிசையில்… ‘வானம்’!

இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் வந்த போதான விளைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.

காகித கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது காகிதக் கப்பல் விட்ட அமைச்சர் சேகர்பாபு வெறும் கண்துடைப்பு வசனங்களை பேசவேண்டாம்

Entertainment News

Popular Categories