வெற்றி பெறாத தொகுதியில் அதிமுக! வரிந்து கட்டும் டிடிவி!

சற்றுமுன் திருச்சி
01 07Nov Dhin election - 2026

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சற்று சூடு பிடித்துள்ளது என்று சொல்லலாம். திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் எதிர்க் கட்சிகளும் ஆளும் கட்சியும் சுறுசுறுப்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. இவர்களுக்கு இடையே டிடிவி தினகரன் தன் பங்குக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். மேலும் கமலஹாசன் உள்ளிட்டோரும் இந்த தேர்தலில் பங்கெடுப்பார்கள் என்று கூறப்படுவதால் திருவாரூர் களம் சூடுபிடித்துள்ளது.

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரியாக (RO) முருகதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

இந்தத் தொகுதியில் இதுவரை திமுக 7,காங்கிரஸ் 1, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி 5 முறை வெற்றி பெற்றுள்ளது.

ஒரு முறை கூட அதிமுக வெற்றி பெறாத நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு போட்டி கொடுக்க டிடிவி தினகரன் களத்தில் இறங்கியுள்ளார் .

இதுவரை வெற்றி பெறாத ஒரு தொகுதியில் அதிமுக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.