
மதிமுக என்பது நிராகரிக்க முடியாத, உதாசீனப்படுத்த முடியாத பெரும் அரசியல் சக்தியாக 2019ல் நிற்போம் என்று சூளுரைத்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
மதிமுகவின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் திருவாரூரில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உறுதியாக பாடுபடும் என்று அவர் கூறியுள்ளார்
மேலும் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று கூறியுள்ள வைகோ, நான் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார் . இதுதான் வைகோவின் 2019 புத்தாண்டு தின சிறப்பு செய்தி!



