புதியதாக உருவாக்கி இருந்த கட்சியின் பெயரை சகாயம் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவித்த இளைஞர்!

சற்றுமுன்
 
சகாயம் ஐ.ஏ.எஸ் தனக்கு அரசியல் களமிறங்க விருப்பம் இல்லை என்று அரசியலுக்கு நான் வரல! என்னை அரசியலுக்கு கூப்பிடாதீங்க! : சகாயம் ஐ.ஏ.எஸ்யிருந்த நிலையில், அவர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், இளைஞர் ஒருவர் சகாயத்தின் முன்னிலையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
 
நேற்று மாலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, கவிஞர் நந்தலாலா தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டம் நடைபெற்றது.
 
 
இந்த கூட்டத்தில் பங்குகொண்டு பேசிய சகாயம் ஐ.ஏ.எஸ்., “இன்றைய இளைய சமுதாயத்தினர் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். இந்தியா ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது மக்களுடைய அதிகாரம் என பொருள்படும். மக்களுக்கு கிடைத்த அதிகாரத்தை குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால், தற்போது மக்களுக்கு அதிகாரம் என்பது கேள்விக்குறியாகிறது. இளைஞர்கள் ஆடம்பரத்தை விடுத்து, தன்னலத்தை விரும்பாமல், பொதுநலத்தை பேண வேண்டும். அப்போதுதான் இந்த தேசம் மென்மேலும் வளரும்” என்பது உள்ளிட்ட பல்வேறு அவரது கருத்தினை கூறினர்
 
 
அப்போது இளைஞர் ஒருவர் சார், நீங்கள் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய உங்கள் பேச்சைக் கேட்டேன். இந்த நாட்டில் நமக்கு சோறுபோடும் விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும் என சொன்னீங்க. அதிலிருந்து விவசாயிகளின் துயரை துடைக்க வருங்காலத்தில் ஒருவன் வருவான்னு சொல்லிக்கிறேன். அது யாருமில்லை நான்தான் சார்.
 
 
உங்க பேச்சைக்கேட்டு கட்சிக்கு பெயர் கூட மாணவர்கள் விவசாயக் கட்சி என்று முடிவு பண்ணிட்டேன்.. ஏன் இந்த பெயரை தேர்வு செய்தேன் என்றால், இந்த தேசத்தில் கல்விக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் நாடு முன்னேறிவிடும். அதுதான் எனது குறிக்கோள் என்று அந்த இளைஞர் ஐ.ஏ.எஸ் சகாயதிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.