சிறுவனை வெறித்தனமாக பலாத்காரம் செய்து படுகொலை செய்த கடற்படையினர் !

Published:

 
பாலியல் பலாத்காரத்திற்கு ஆறு வயதே ஆன தமிழ் சிறுவன் உட்படுத்தப்பட்டு,அவனை வெறித்தனமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டம் சம்பூர் எனும் பகுதியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பகுதியில் நடைபெற்ற போருக்கு பிறகு தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர். அந்த கிராமத்தில் குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்த்திருந்தனர். அதன் அடிப்படையில் அந்த சிறுவனை தேடும் பணியில் இலங்கை காவல் நிலையத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
 
 
அவர்கள் நடத்திய தேடுதலின் போது சம்பூர் இலங்கை கடற்படை முகாம் அருகே இருக்கும் ஒரு பாழடைந்த கிணற்றில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக தகவல் வெளியானது. அங்கு சென்று காவல் நிலையத்தினர் பார்த்தபோது, அது தொலைந்து போன தர்சன் என்றும் அந்த சிறுவன் காணாமல் போன அன்று, கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்துச் சென்றார்கள் என்று நேரில் பார்த்த சிறுவர்கள் கூறினர்.
 
இலங்கை கடற்படையினர் ஆறு வயதே ஆன அந்த தமிழ் சிறுவனை ஓரின சேர்க்கைக்கு உள்ளாக்கி,அதன் பின்
தர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் போட்டு கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
 
நடைபெற்ற சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் குடியேறியுள்ள தமிழகர்களிடம் அதிர்ச்சியும், அச்சமுசம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Related articles

Recent articles

spot_img