விமானப்படை… எதிரிகள் பலம் பெறுகிறார்கள்!

அடடே... அப்படியா? கட்டுரைகள் சற்றுமுன் தலையங்கம் துணுக்குகள் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
Pakistan Air Force Pakistan JF 17 Thunder Bidini - 2026

அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமானங்கள் குறித்து பேசிப் பேசி ரஃபேல் காந்தி என்ற பட்டப் பெயரைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், உண்மையில் காங்கிரஸ் நாட்டின் ராணுவத்தில் கவனம் செலுத்தவில்லை என்பதும், மேம்பாட்டுக்கு எந்த அளவும் உதவவில்லை என்பதும், ராணுவத்தினரின் மனக்குமுறல்.

இந்திய விமானப்படையின் பலம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், தொடர்ந்து வீழ்ந்து வந்திருக்கிறது. அதே நேரத்தில் நமது எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தானின் பலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004-15 ஆண்டுகளில் சீனா தனது படையில் 400 விமானங்களை இணைத்துள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது எப்-16 விமானங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியதுடன் 43 JF-17 விமானங்களையும் இணைத்துள்ளது.

ஆனால், 2004ல் 40 ஸ்குவாட்ரான் என்றிருந்த இந்திய விமானப்படையின் பலம் 2015ல் 33ஆக குறைந்துள்ளது. தற்போது ரபேல் விமானம் மற்றும் தேஜஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தேஜஸ் விமானம் போரில் அதிகம் பயன்படுத்த முடியா வண்ணம் உள்ளது. தவிர வெறும் 36 ரபேல் தான் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான வகையிலும் கூட, முதல் விமானம் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திலும் 2022ம் ஆண்டில் அனைத்து விமானங்களும் டெலிவரி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது MMRCA 2 என்ற திட்டத்தின் கீழ் விமானங்கள் வாங்கும் பணி நடைபெற்று வருகிறது எனினும் மிகத் தாமதமாகவே இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதற்கு அரசியல் இடையூறுகள் காரணங்களாக இருக்கலாம்… எனினும், மத்திய அரசு இதில் அதிக கவனம் செலுத்தி, நாட்டின் படைபலத்தைப் பெருக்க உத்வேகம் காட்ட வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.