திருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vadai boiled oil - 2026

தைப்பூசத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் கோவில்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் மூலம் காணிக்கை செலுத்தினர்.

vadai boiled oil2 - 2026

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடி கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் வினோத வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் கைகளை விட்டு வடை சுட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.